பிகினி உடையில் பெட்ரோல் பங்க் முன் குவிந்த பெண்கள்.. அலைமோதிய கூட்டம்..

பிகினி உடையில் பெட்ரோல் வாங்க பங்க் முன் பெண்கள் ஆண்கள் என குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில், சயிரா என்ற பகுதியில் புதியதாக ஒரு பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக பெட்ரோல் வாங்க வரும் முதல் 3 மணி நேரம் பிகினி உடையில் வரும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அந்த பகுதியில், உள்ள ஆண்களும், பெண்களும், பிகினி உடையில் அந்த பெட்ரோல் பங்க் முன் குவிந்து அலைமோதி வாங்கினார்கள். இதனால் பெட்ரோல் பங்க் ஊழியர்களும் திணறி போயுள்ளனர்.

3 மணி நேர சலுகையினால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் வந்து பெட்ரோலை வாங்கி சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ ரஷ்யாவில் உள்ள சமூக வலைத்தளத்தில் வைரலாகி மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

ரஷ்யாவில் புதிதாக ஒரு பெட்ரோல் பங்க் ஆரம்பித்தால் அந்த பெட்ரோல் பங்க் மக்கள் மத்தியில பிரபலமடைய பல மாதங்கள் ஆகும். ஆனால் வித்தியாசமான சலுகை அறிவிப்பின் மூலம் அந்த பெட்ரோல் பங்க் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.