செம செக்ஸி.. அரைகுறை ஆடையில் அசரடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் ஷேர் செய்துள்ள செக்ஸி போட்டோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்று சீசன்களை கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் திரைத்துறையை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

அப்படி இல்லாதவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிச்சயம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. சூட்டோடு சூடாக வாய்ப்பு கிடைக்கிறதே தவிர அதன் பிறகு பிக்பாஸ் பிரபலங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் ரைஸா வில்சன். அதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்த அவர், வேலையில்லா பட்டதாரி பார்ட் 2வில் நடித்திருந்தார்.

ஆனால் அந்தப்படம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியானதால் பிக்பாஸ் பிரபலமாகதான் பார்க்கப்படுகிறார் ரைஸா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பியார் பிரேமா காதல் என்ற படத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பரிட்சயமான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்தார்.

அதனை தொடர்ந்து தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து இருக்கிறார் ரைஸா வில்சன். அந்த படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் உள்ளார்.


சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரைஸா, அவ்வப்போது நாய் பூனைகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ரைஸா.


அண்மையில் நீச்சல் குளத்தில் நின்றபடி செக்ஸைவிட சிறந்தது என்ற கேப்ஷனில் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தீயாய் பரவியது. இந்நிலையில் நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் படுத்தப்படி செம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார் ரைஸா.


இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிவீட்டிர்களா ரைசா என கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பலரும் என்னா லுக்.. செம ஹாட்.. செக்ஸி என புகழ்ந்து வருகின்றனர்.