முதல் காதல் தோல்வியை பற்றி ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்

தமிழ் சினிமாவிற்கு தனியார் தொலைக்காட்சியின் மூலமாக அறிமுகமாகி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதற்கு பிறகு எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் சிவா. மேலும், இவர் தயாரித்து நடித்த ‘கனா’ படமும் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதளவில் பேர் வாங்கி கொடுத்தது.

இந்நிலையில் இணையத்தில் ஒளிபரப்பாகும் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் செய்தியாளர் ஒருவர் சிவாவிடம் உங்களின் முதல் காதல் அனுபவத்தை பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு சிவா கூறியது ‘ ஒரு தலை காதல் இருந்தது, ஆனால் கொஞ்ச நாட்களேயே போயிருச்சு’.

மேலும், செய்தியாளர் கேட்டது அந்த பெண்ணை நீங்கள் சினிமாவிற்கு வந்த பிறகு பாத்தீர்களா. இதற்கு சிவா ஆம் நான் தொலைக்காட்சியில் இருக்கும் பொழுது ஒரே ஒரு தடவை ‘சிட்டி சென்டர்’ என்ற இடத்தில் பார்த்தேன் ஆனால், அந்த பையனுடன் இல்லை என்று விளையாட்டாக சிரித்துக்கொண்டே கூறினார்.