காதலன் வீட்டிலிருந்து மறைமுகமாக ஆட்டோவில் சென்ற பிரபல நடிகை.

பாலிவுட் திரையுலகில் ‘பியார் கி கீத்’ என்ற படத்தின் முலம் அறிமுகமானவர் நடிகை ‘மலைக்கா அரோரா’. மேலும், இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். திருமணத்திற்கு பின்பு சில படங்கள் மட்டுமே நடித்ததால் இவருக்கு மார்க்கெட் குறைந்தது.

மலைக்கா அரோரா 1998 ஆம் ஆண்டு ‘அர்பாஸ் கான்’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் உள்ளார் அவரது பெயர் ‘அர்ஹான்’ ஆகும். மேலும், இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 2017ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விவாகரத்துக்கு பின் மலைக்கா அரோரா, தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். மேலும், இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்களாம். ஆனால், மலைக்கா அரோரா தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பு ஒன்றாக சேர்ந்து ஊர் சுத்தும் புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் திருமணத்திற்கு முன்பு அர்ஜுன் கபூரின் வீட்டில் இருந்து மறைமுகமாக கீழாடை அணியாமல் மலைக்கா அரோரா சென்ற புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. மேலும், தனது சொகுசு காரை விட்டுவிட்டு ஆட்டோவில் தனது பெற்றோர்களோடு சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…