நிகழ்ச்சியை விட்டுவிட்டு ஊர் சுற்றிய தொகுப்பாளினி

தனியார் தொலைக்காட்சியில் சுமார் 6 வருடங்கள் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் ‘பிரியங்கா தேஷ்பாண்டே’. இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் நகைச்சுவையான முறையில் கொண்டு சென்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சூப்பர் சிங்கர் சீனியர், ஜூனியர் சீசன் 5, 6, 7 மற்றும் ’ஸ்டார்ட் மியூசிக்’ மற்றும் தற்போது ’தி வால்’ கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாலினியாகவும் மற்றும் கலக்கப்போவது யாரு சீசன் 5,6,7 இல் நடுவராகவும் பணிபுரிந்து வந்தார் பிரியங்கா.

மேலும், இவருடன் தனியார் தொலைக்காட்சியில் ‘நிர்வாக தயாரிப்பாளர்’ வேலைசெய்யும் பிரவீன்குமார் என்பவரை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பிரியங்கா அவ்வப்போது தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுக்கொண்டே இருப்பார். இந்நிலையில் சூப்பர் சிங்கர் பைனல் நடந்த கையுடன் சூப்பர் சிங்கர் குழுவினருடன் இன்ப சுற்றுலா சென்றுள்ள பிரியங்கா அங்கிருந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இண்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிரியங்காவின் சுற்றுலா புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டி பாக்ஸில் செமையாக கலாய்த்து வருகிறார்கள். அது என்னவென்றால் புகைப்படத்தை பார்த்துவிட்டு பிரியங்கா நீங்கள் ‘பார்ப்பதற்கு வயதானவள் போல் தோற்றமளிக்கிறீர்கள்’ மற்றும் ‘என்ன பிரியங்கா கடைசியில் மாடு மேய்க்க அனுப்பிவிட்டார்களா’ என்று பிரியங்காவை கலாய்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

12hrs of PEACE☮ #supersinger7 #itsawrap ?? PC: @djgowthamofficial iphone11

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande) on

 

View this post on Instagram

 

12hrs of PEACE ☮ #supersinger7 #itsawrap ??

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande) on

>