பிரபல தொலைக்காட்சி சீரியலான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நந்தினி. அதன்பின் பல சீரியல்களில் நடித்து வந்தார். தொலைக்காட்சி பிரபலமானதுடன் நிகழ்ச்சி நடுவராகவும் இருந்து வருகிறார்.
கடந்த வருடம் இவர் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்திருந்தார். சில கருத்து வேறுபாட்டால் இருவருக்குமிடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்துள்ளார். இதனால் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார்.
இதன்பின் இதிலிருந்து ஒரு வருடத்திலேயே மீண்டு வந்த நந்தினி நடிகர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் சமுகவலைத்தளத்தில் வைரலாகி பலரின் வாழ்த்துக்களை பெற்றார் நந்தினி.
ஆனால் மணமக்கள் எடுத்துக்கொண்ட போட்டோஹுட் போன்ற வீடியோ காட்சியில் முத்தமிடுவது போல் இருப்பதை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர் சிலர். இதை பார்த்த நெட்டிசன்கள் இவரையாவது விட்டுவையுங்கள் நந்தினி என்று கூறி பேசியுள்ளனர். திருமணம் செய்த பெண் என்று பார்க்காமல் சிலர் இப்படி கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.