பிரான்ஸ் நாட்டின் சார்ந்த டாக்டர் ஜோன்ஸ் லி என்ற 62 வயதுடைய நபர்., அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இவர் அங்குள்ள மத்திய மற்றும் மேற்கு பிரான்ஸில் இருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றவராக இருக்கிறார்.
இந்த நிலையில்., டாக்டர் ஜோன்ஸ் லி தனது வீட்டின் அருகே வசித்து வரும் 6 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கடந்த 2017 ஆம் வருடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இதனை போன்று இரண்டு உறவுக்கார சிறுமியர் மற்றும் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான விசாரணையில் டாக்டரின் வீட்டினை சோதனை செய்த நிலையில்., டாக்டர் வீட்டில் இருக்கும் டைரியை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 250 க்கும் மேலான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து., அவர்களை எவ்வாறு பாலியல் வன்கொடுமை செய்துள்ளோம் என்பதை காட்சி பதிவுகளாகவும் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த டைரியில் சுமார் 250 பெண்களின் பெயர் இருந்த நிலையில்., 209 பேரை தொடர்பு கொண்ட காவல் துறையினர் அனைத்தும் உண்மை நிலையில்., பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் போது அவர்கள் இளம் வயது சிறுமியாக இருந்துள்ளனர்.
இதனால் இது குறித்து வெளியே தெரிவிக்காமல் இருந்த நிலையில்., தற்போது அனைவரும் டாக்டர் ஜோன்ஸ் மூலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை தெரிவித்துள்ளனர். கடந்த 30 வருடங்களாக சிறுமிகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.