முன்னதாக கோத்தபய ராஜபக்சேவின் மகன், “தமிழக தலைவர்களே ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்தா ராஜபக்சேவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே கூறியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
தமிழினப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது தமிழர்களுக்கு ஒரு இருண்டகாலமாகும். இந்த ஆட்சி மாற்றம் பெரும் அச்சுறுத்தலையும், கலக்கத்தையும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அது மிகையில்லை.
இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது.” என அதில் குறிப்பிட்டு இருக்கின்றார்.