இந்தியாவின், ஹைதராபாத்தை சேர்ந்த பாகுபலியில் நடித்த ராணாவின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ் பாபுவின் வீடு, அலுவலகம், மற்றும் ராமாநாயுடு ஸ்டூடியோவில், வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்
சுரேஷ் பாபு வெளிநாட்டில் இருக்கிறார். இந்த நிலையில், காலை 6 மணிக்குத் தொடங்கிய சோதனை,தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில், செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சட்டவிரோதமாக, இணையதளங்களில் படங்கள் ரிலீஸ் ஆவதால், கோடிக்கணக்கில் இழப்பை எதிர்கொள்வதாகவும், இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாமலும், மின்சார கட்டணத்தை கூட செலுத்த முடியாமலும் திண்டாடுவதாகவும், சுரேஷ் பாபு தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படியில், அவர் அந்த பேட்டியில் கூறிய தொகைக்கும், அவர் கணக்கு காட்டியிருக்கும் தொகைக்கும், வேறுபாடு இருப்பதாக தெரிகிறது என்றும், வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்ற அடிப்படையிலும், சோதனை நடைபெறுவதாக, வருமானவரித்துறை வட்டாரத் தகவல்கள் கிடைத்துள்ளது.