இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங் பதவி விலகிய நிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார். அவர் வெற்றிக்கு பின் அமைச்சர்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங், ராஜினாமா கடிதத்தை கையளித்ததுடன், பிரமரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காலம் வரையில் இடைக்கால அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படவிருந்த பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிதி அமைச்சு பதவியும் மஹிந்த மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.