நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலில் கூட்டணி சேரும் சூழ்நிலை தற்போது உள்ளது. நேற்று அவர்கள் அளித்த பேட்டியில் ‘தமிழக மக்கள் நலனுக்காக தேவைப்பட்டால் இருவரும் கூட்டணி சேர தயார்’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினி-கமல் கூட்டணி சேர்ந்தால் நடிகர் கமல் தான் முதலமைச்சர் வேட்பாளர் ஆகவேண்டும் என நடிகை ஸ்ரீப்ரியா பேட்டி அளித்துள்ளார்.
இதே விஷயம் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிக்பாஸ் புகழ் சினேகன் “ரஜினி-கமல் இருவரும் பதவி ஆசையில் அரசியலுக்கு வரவில்லை. அவர்கள் மக்கள் நலனுக்காக தான் அரசியலில் நுழைகிறாரக்ள்” என தெரிவித்துள்ளார்.