இன்றைய ராசிபலன் (21.11.2019)

விகாரி ஆண்டு – கார்த்திகை 5 – வியாழக்கிழமை (21.11.2019)
நட்சத்திரம் : பூரம் மாலை 5.18 வரை பின்னர் உத்திரம்
திதி : நவமி காலை 9.35 வரை பின்னர் தசமி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை 10.45 – 11.45

வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)
சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் திறமையான செயலுக்கு நல்ல வெகுமதி கிடைக்கும். சிக்கனமாக செலவு செய்தால் கடன் வாங்குவதை தவிர்க்கலாம். வாழ்க்கைதுணை பக்கபலமாக இருப்பார். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்

மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நல்லதையும் கெட்டதையும் சமமாக பாவித்துக்கொள்ளவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி
கடக ராசி நேயர்களே, உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். உடல் நலம் சீராகும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப பணிகளை அவசரம் இல்லாமல் நிதானமாக செய்யவும். வாகனத்தில் மிதவேகம் அவசியம். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களே, வெளியிடங்களில் எல்லாரிடமும் தன்மையாக பேசி பழகுவது நல்லது. பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்

துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களே, சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தள்ளி போன காரியங்கள் உடனடியாக முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். காரிய தடை விலகும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி பெற முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, மன சஞ்சலம் நீங்கும். கணவன் மனைவிக்குள் பனிப் போர் ஏற்படும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மகர ராசி
மகர ராசி நேயர்களே, வாக்கு சாதுரியம் ஏற்படும். உறவினர்களுடன் வீண்விவாதம் வந்து போகும். வீடு, வாகனம் வகையில் செலவுகள் கூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். புதுமையான் விஷயங்களில் ஆர்வம் கூடும். திருமண தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பர்.

மீன ராசி
மீன ராசி அன்பர்களே, குடும்பத்திற்காக நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். மனதில் சரியான பட்டதை தைரியமாக செய்ய முடியும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.