நம் அனைவருக்கும் பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியும். ஆனால் பூண்டின் நிறைய மருத்துவ குணங்கள் வெறும் பூண்டை சாப்பிடுவதால் தான் கிடைக்கும்.
மேலும் இது மற்ற பூண்டு சம்பந்தப்பட்ட குறிப்புகளை காட்டிலும் வித்தியாசமானது. இந்த முறையை நீங்கள் 10 – 15 நாட்கள் வரை பின்பற்றினால் பூண்டின் மிகச்சிறந்த நன்மைகளை உங்களால் பெற முடியும்.
இதை எப்படி செய்வது?
- ஒரு பல் பூண்டினை உங்களது வாயில் போட்டுக்கொள்ளுங்கள். அதனை கன்னப்பகுதியில் அடங்கி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் பூண்டை ஒரு கன்னப்பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு சுழற்றுங்கள்.
- இதை காலையில் எழுந்தது முதல் வேலையாக, ஒரு முப்பது நிமிடங்கள் செய்யுங்கள். பூண்டை நீங்கள் 30 நிமிடங்கள் வாயில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
- முப்பது நிமிடங்களுக்கு பிறகு உங்களது வாயில் உள்ள பூண்டை வெளியில் துப்பிவிடுங்கள். பற்களை துலக்குங்கள். பின்னர் சிறிதளவு புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் வாயில் இருக்கும் பூண்டின் வாசனை போய்விடும்.
இப்படி செய்தால் கிடைக்கும் நன்மைகள்
- இவ்வாறு முப்பது நிமிடங்கள் வரை பூண்டை வாயில் வைத்திருப்பதால், பூண்டின் மருத்துவ குணங்கள் மெதுவாக உங்களது உடலுக்குள் சென்றுவிடும்.
- இது உங்களது நிணநீர் மண்டலம் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்கிறது. இது உங்களது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், வாயை துர்நாற்றம் இல்லாமல் வைக்கவும் உதவுகிறது.
- இதை செய்வதால் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பசியின்மையை போக்குகிறது, காய்ச்சல்களில் இருந்து பாதுகாக்கிறது.
- மேலும், சுவாச பிரச்சனைகள், இரத்தசோகை போன்றவற்றிற்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதுமட்டுமின்றி, சிறுநீரகம் மற்றும் சிறுநீரக பாதையையும் பாதுகாக்கிறது.
- இது வறட்டு இருமலை குணப்படுத்தும், அதுமட்டுமின்றி சிறுநீரகத்தில் கற்கள் வராமல் இது உங்களை பாதுகாக்கும்.
குறிப்பு
- உங்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுவதாக இருந்தால் இதை செய்யாதீர்கள். மேலும் உங்களுக்கு வாய்ப்புண் இருந்தாலும் இதை செய்ய வேண்டாம்.
- இந்த பிரச்சனைகள் இருக்கும் போது இதனை செய்தால் பிரச்சனைகள் அதிகமாகும். அதனால் நீங்கள் உங்களது மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யுங்கள்.