ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்ப்பூரை சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் எனும் 21 வயது இளைஞர், ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். ஐந்து வருட படிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு நீதித்துறை பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளை எழுதினார்.
இதில் முதல் முயற்சியிலேயே பிரதாப்சிங் தேர்ச்சி பெற்று இருக்கின்றார். விரைவில் இவருக்கான நீதிபதி பதவிக்கு அரசாணை வழங்கப்பட இருக்கின்றது. சமீப காலத்திற்கு முன்புவரை நீதித்துறை பணிகளுக்கான தேர்வை எழுத குறைந்தபட்ச வயதாக 23 வயதே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சமீபத்தில் 21 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், முதல் முயற்சியிலேயே பிரதாப் சிங் தேர்வு பெற்று இருக்கின்றார். இந்தியாவின் இளம் நீதிபதி என்ற சாதனையை அவர் படைத்து இருக்கின்றார்.
இதுகுறித்து அவர், “முதல் முயற்சியிலேயே நான் வெற்றி பெற்றதற்கு எனக்கு உதவியாக இருந்தது, எனது பெற்றோர்தான். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.