இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அம்மாநிலத்தில் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்., உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தை சார்ந்த 16 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வருபவரின் பெயர் ஜீஷான்.
சம்பவத்தன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்த நிலையில்., சிறுமியின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த கொடூரன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை வன்கொடுமை செய்து இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இவனது மிரட்டல்களுக்கு பயப்பிடாத சிறுமி எதிர்த்து பேசவே., ஆத்திரமடைந்த கொடூரன் சிறுமியின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளான். சிறுமியின் மீது தீப்பற்றி எறிந்த நிலையில்., சிறுமி காம கொடூரனை சேர்த்து தீக்கிரையாக்க முடிவு செய்துள்ளார்.
தீயின் அக்னியை பொறுக்க இயலாத கொடூரன் கதறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது தொடர்பான விசாரணையில் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் ஷஜான் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த அவனின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.