நேர்கொண்ட பார்வை படத்திற்கு அஜித் தனது 60வது படத்திற்காக உடலமைப்பு பிட்டாக்கும் வேலைகளில் உள்ளார்.
தனது மனைவி ஷாலினி பிறந்தநாளை பிரபல ஹோட்டலில் கொண்டாடினார், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
தற்போது தல அஜித்குமார் நடித்து வரும் 60வது படத்தின் கதை என ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது சர்வதேச தீவிரவாதிகளை பிடிக்க தமிழக போலீஸ் சார்பில் ஒரு டீம் அமைக்கப்படுவதாகவும், அந்த போலீஸ் டீமிக்கு அஜித் தலைமையில் 6 பேர் இருப்பதாகவும், அதில் 4 பேர் பெண்கள் என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே அஜித்தின் 60வது படத்தில் நயன்தாரா நாயகி என கூறப்படும் நிலையில், நிக்கி கல்ராணி, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.