குத்து சண்டை போட்ட கோழி மற்றும் பூனை.!!

தற்போது உள்ள இணைய உலகத்தில், தினம் பல வீடியோகள் வைரலாகி வருகிறது. இந்த வகையில் கோழியும், பூனையும் குத்து சண்டை போடும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த வீடியோவில் ஒருவர் தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் நின்றுகொண்டு இருந்த போது கோழியும், பூனையும் ஒன்றுடன் ஓன்று சண்டை போட்டுக்கொள்வதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். பிறகு அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கோழி அந்த பூனையை பரந்து பரந்து கொத்துகிறது. பதிலுக்கு அந்த பூனை தனது கால்களால் அந்த கோழியை அடிக்கிறது. பார்ப்பதற்கு கோழியும், பூனையும் குத்து சண்டை போடுவதுபோல அந்த காட்சி உள்ளது.