நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் “அர்ஜுன் ரெட்டி”. இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக “ஆதித்ய வர்மா” என்ற பெயரில்., ஈ 4 என்டர்டைன்மெண்ட் தயாரித்து வழங்கியுள்ளது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள நிலையில்., அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த கிரிசையா தான் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக “அக்டோபர்” என்ற இந்தி திரையுலகில் நடித்த பனிடா சாந்து நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் நேற்று வெளியான நிலையில்., நல்ல வரவேற்பானது கிடைத்துள்ளது. மேலும்., திரைப்படத்தின் காதல் காட்சிகளை போல நிதர்சனத்தில் நடைபெறுமா? என்று பத்திரிகையாளர்கள் கதாநாயகியிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நடிகை “இது குறித்து என்னால் பொதுவாக பேச இயலாது. ஆனால் நிதர்சனமான வாழ்க்கையில் காதல் வாழ்க்கையை நான் விரும்பவில்லை… ஆதித்ய வர்மா மிகவும் மோசமானவர். குறைகளோடு இருப்பவர்., இதனைப்போன்ற துரதிஷ்ட காதல்களும் நிஜவுலகில் இருக்கிறது.
திரைத்துறை என்பது கதைகளை கூற மட்டும் தான். இதனை திரையில் காட்டுவதற்கும்., திரையில் போற்றுவதற்கு குறுகிய வித்தியாசம் உள்ளது. நாயகனின் கோபம் மற்றும் நடத்தையால் ஏற்படும் வலி மற்றும் வேதனையை திரையில் கட்டியிருப்போமோ தவிர்த்து., கோபமான இளைஞர் வாகனத்தை இயக்குகிறார் என்று காட்டவில்லை என்று தெரிவித்தார்.