இலங்கையில் அமலான அதிரடி சட்டம்.!!

இலங்கை நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளரான கோத்தபய ராஜபக்சே வெற்றியடைந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி அதிபராக பதவியேற்ற நிலையில்., பிரதமான ரணில் விக்ரமசிங்கே  பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதனைத்தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் மற்றும் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்து வைத்திருந்தார். இதுமட்டுமல்லாது 2 தமிழர்கள் உட்பட 16 நபர்கள் அடங்கிய இடைக்கால மந்திரி சபையையும் நியமணம் செய்திருந்தார்.

பின்னர் பேசிய கோத்தபய பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும்., மக்களின் நலனிற்காக அரசு செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த கோத்தபய ராஜபக்சேவால் அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்தின் அடிப்படையில்., ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஆயுத படையினர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும்., பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் சட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.