சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் மணலூர் என்ற கிராமத்தில் காண்டீபன் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் கடந்த 20ஆம் தேதி மரணமடைந்துள்ளார். அவருடைய உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல மற்ற சமூகத்தினர் பொது வழியை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இறந்தவரின் உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியிலேயே வைக்கப்பட்டு மூன்று நாட்களாக இருந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மக்கள் இறந்தவரின் உடலை மேல தெருவிலிருந்து ஜோதிபுரம் வழியாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அதற்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரச்சனைக்குரிய பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தார். மேலும் உடலை மேலத் தெரு வழியாக மயானத்திற்கு கொண்டு செல்ல அனுமதி அளித்து அனுமதி அளித்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி இறந்தவரின் உடலானது மூன்று நாட்களுக்குப் பின்பு காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.