தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை சார்ந்தவர் தினேஷ் (வயது 26). தினேஷிற்கு நேற்று பிறந்தநாளாக இருந்த நிலையில்., மதுரையில் இருக்கும் தந்து நண்பர்களான பிரசன்ன குமார் (வயது 26) மற்றும் குணா (வயது 23) ஆகியோரது நிழற்பட நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நண்பனின் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு தனது நண்பர்களுடன் சென்று பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்., இன்று அதிகாலையில் தினேஷை இல்லத்தில் விடுவதற்காக காரில் புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில்., மதுரை – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வேடர்புளியன்குளம் அருகே கார் சென்று கொண்டு இருந்த நிலையில்., திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பார்த்த விதமாக காரின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியதை அடுத்து., காரில் பயணம் செய்திருந்த மூவரும் காருக்குள்ளேயே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இது குறித்த தகவலானது காவல் துறையினருக்கும் – தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.