இந்திய திரையுலகிற்கு 2009ஆம் ஆண்டு வெளிவந்து பல ஆஸ்கர்களை தட்டி சென்ற படம் தான் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’. இப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் தான் நடிகை ‘ஃபிரிடா பின்டோ’.
இப்படத்தில் இவருடன் இணைந்து நடித்திருந்த கதாநாயகன் தேவ் பட்டேலுடன் மூன்று வருடங்களாக காதலில் இருந்தார் ஃபிரிடா பின்டோ. எங்கே சென்றாலும் ஒன்றாக செல்லுவது குறிப்பாக விருது விழா மற்றும் பொது விழாக்களுக்கு கூட சேர்ந்த செல்லுவார்கள்.
மேலும், 2014ஆம் ஆண்டு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டார்கள். தேவை பிரிந்த ஃபிரிடா பின்டோ சிறிது காலம் தனிமையில் இருந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் தனது வருங்கால கணவர் இவர் தான் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். அவரின் பெயர் ‘கோரி டிரான்’ இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று உறுதி செய்வதற்காக இவர்களின் இரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு பதிவிட்டுளார்கள்.
இதோடு கோரி டிரான் அவர்களுக்கு ஃபிரிடா பின்டோ பிறந்தநாள் வாழ்த்தையும் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…