தமிழில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த சீசன் 3யில் 17 பேர் போட்டியாளராகள் கலந்து கொண்டனர். என்னதான் இந்த சீசன் முடிந்து சில மாதங்கள் ஆனாலும் கலந்து கொண்ட போட்டியாளர்களின் தாக்கம் இன்னும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் குறைந்ததாக தெரியவில்லை.
இதில், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மீரா மிதுன், அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா, ஷெரின் போன்றவர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தொல்லை தாங்கவில்லை. ஆனால் இதை தான் இவரது ரசிகர்கள் இவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் விவகாரத்தை நம்மால் மறக்கவே முடியாது. ஆனால் வெளியே வந்த பிறகு இவர்கள் இருவரும் இவர்களின் காதலை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்கவில்லை. எப்போது தான் இவர்கள் கூறுவார்கள் என்று இவர்களது ரசிகர்களும் ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு லாஸ்லியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்துடன் ‘go green’ என்றும் பதிவிட்டுருந்தார்.
அதைத்தொடர்ந்து, தற்போது நடிகை சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் லாஸ்லியா ‘go green’ என்று போட்டுருந்தது போலவே சாக்ஷியும் ‘go green’ என்று பதிவிட்டிருந்தார்.
இதன்பின், இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சாக்ஷியிடம் ‘இதெல்லாம் ஒரு பொழப்ப’ என்று கேள்வி கேட்டு வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
Go Green ? pic.twitter.com/bPdxr4zuEJ
— Sakshi Agarwal (@ssakshiagarwal) November 23, 2019