பும்ராவுடன் காதலின் சர்ச்சைக்கு பின் ஹிந்தி நடிகருடன் காதலா?..பிரபல நடிகை அனுபமா கூறிய பதில்..!

நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த ‘கொடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் நடிக்க துவங்கினார். அனுபமா நடித்த முதல் படமே பிளாக் பாஸ்டர் ஹிட்டானது.

இதன் மூலமாக தமிழில் வாய்ப்பு கிடைத்து நடிக்க துவங்கினார். கொடி படத்திற்கு பிறகு இவர் தமிழ் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். மேலும், கன்னடத்திலும் அனுபமா தற்போது அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் பும்ரா உடன் அனுபமாவிற்கு காதல் இருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், இந்த காதல் விவகாரம் உண்மை இல்லை என்று இருவரும் நிரூபித்து விட்டனர்.

மேலும், தற்போது நடிகை அனுபமாவிற்கு ஹிந்தி நடிகருடன் காதல் இருப்பதாக தற்போது இணையத்தில் சில செய்திகள் கசிந்து வருகின்றன. இதற்கு அனுபவிடம் கேட்ட பொது மிக கோவமாக “என் வாழ்க்கை என் கையில்” நான் யாரை வேடுமானாலும் திருமணம் செய்வேன்” என்று கூறியுள்ளார் அனுபமா.