சூப்பர் சிங்கர் புகழ் பூவையாருக்கு பிகில் படத்தை தொடர்ந்து அடித்த லக்!

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது நாம் அனைவருக்கும் தெரியும்.

சிறியவர்களுக்காக நடந்த கடைசி சீசனில் பூவையார் என்ற சிறுவன் மக்கள் மனதில் இடம்பெற்றார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து பிகில் படத்தில் பாடியும், பாடலில் நடனம் ஆடியும் இருந்தார்.

அப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 64வது படத்திலும் அவர் நடிக்கிறார் என்ற செய்தி வந்தது ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பூவையாருக்கு அடுத்து ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதியின் பாடல் ஒன்றில் பூவையார் பாடியுள்ளாராம்.

இதை இசையமைப்பாளரே புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.