இலங்கையின் பல மாவட்டங்களிலும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் டெங்கு நோய் தாக்க வீதம் அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நாட்டின் முக்கிய மாவட்டமான கொழும்பு மாவட்ட மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு குறிபபிட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் மாத்திரம் 15,632 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த அபாய நிலையை தவிர்க்கும் வகையில் கொழும்பு வாழ் மக்கள் தமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய வகையிலான இடங்களை இனங்கண்டு அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.