இனிமே கேக் வாங்க கடைக்கு போக வேண்டாம் வீட்டுலேயே செய்யலாம்..!

தேவையான பொருட்கள் :

வெண்ணெய் – 150 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
மைதா – 250 கிராம்
முட்டை – 3
பேக்கிங் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
கொதி நீர் – அரை கப்
கோக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும்.

மைதாவையும் பேக்கிங் பவுடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.

வெண்ணெயையும் பொடித்த சர்க்கரையும் நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனுடன் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்கு கலக்கவும். பின் மைதா கலவையையும் கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே கலக்கவும் அல்லது ஒரு ஸ்பாட்டுலாவால் நன்கு கலக்கவும்.

அதை அவனில் வைத்து 160 டிகிரியில் 25 -35 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

அதன் பிறகு ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறலாம்.