உடல் பலத்தை அதிகரிக்கும் பாதாம் மசாலா பால்..!

தேவையான பொருட்கள் :

பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
பட்டை, லவங்கம் – 1
மிளகு – 15
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
குங்கும பூ – கால் டீஸ்பூன்
பாதாம் – 25
முந்திரி – 15

செய்முறை : 

முந்திரி மற்றும் பாதாம் பருப்பை தனிதனியே 5 நிமிடம் ஊற வைக்கவும். பின் பாதாம் பருப்பின் தோலை நீக்கவும். பாத்திரத்தில் அரை லிட்டர் பால் ஊற்றி அதில் மிளகு, பட்டை, கிராம்பு, லவங்கம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பாலினுள் மசாலா பொருட்கள் அனைத்தும் நன்கு இரங்கும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பால் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும். பின் பாதம் மற்றும் முந்திரியை நன்கு மென்மையாக அரைத்து பால் எடுக்கவும். பின் அதனுடன் மீதமுள்ள பாலை சேர்த்து காய்ச்சவும்.

மசாலா பால் கொஞ்சம் வற்றியதும் கொதிக்கும் பாதாம் பாலுடன் வடிகட்டி சேர்த்து கொதிக்கவிடவும். பின் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது சுவையான பாதாம் மசாலா பால் தயார்.