சுற்றாடலை பாதுகாக்கும் பணியை இன்று பொலிஸ் சுற்றாடல் பிரிவும், சுற்றாடல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.
இதன் முதல் கட்ட நடவடிக்கை கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் ஆரம்பமானது.
அதற்கு அமைவாக காலி முகத்திடலிலும், புறக்கோட்டை அரச மர சந்தியிலும் துப்பரவு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தீங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொள்வர். இதன்படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பொலிசார் நியமிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் சுற்றுச்சூழல் பிரிவுகளின் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு நகரில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு தூய்மை பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகமேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.