மாணவியிடம் சில்மிஷம் செய்த 60 வயது பள்ளி தாளாளர்..!

இந்த காலகட்டத்தில், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே, மாணவிகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்வது, செல்மிஷம் செய்வது என்ற இழி செயல்கள் நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் ஓசூரில் 11 வயது மாணவியை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

ஒசூர் இராயக்கோட்டை சாலையில்  தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே 60 வயதான குருதத்தா என்பவர் பள்ளியின் தாளாளராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், கையெழுத்து  பயிற்சி வகுப்பின் காரணமாக ஓசூரை சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தையுடன் சென்றிருக்கிறார். அப்போது மாணவியை வகுப்பறையில் விட்டுவிட்டு தந்தை சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் புத்தகம் எடுத்து தருவதாக கூறி அந்த மாணவியிடம் குருதத்தா சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதை தொடர்ந்து அந்த மாணவி அவரது தந்தையிடம் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து, கடும் கோபமடைந்த மாணவியின் தந்தை, பள்ளியின் தாளாளர் குருதத்தாவிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

இதனால், பதட்டம் அடைந்த தாளாளர், மாணவியின் தந்தையிடம் செய்தது தவறு தான் மன்னித்து விடுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார், பள்ளியில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி மாணவியிடம் தாளாளரே இவ்வாறாக நடந்து கொண்டது ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.