பொய்த்துபோன பருவமழை.. தாறுமாறாக கொட்டி தீர்க்கும் கனமழை.. வாட்டி வதைக்கும் வெயில் என்று கடந்த சில வருடங்களாகவே பருவமழையானது தொடர்ந்து பலவிதமான காலநிலையில் பெய்து கொண்டு வருகிறது.
இதனால் உணவு உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டு., சில சமயங்களில் காய்கறிகளின் விலையானது பெரும் உச்சத்திற்கு சென்று விடுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் சமையலில் வெங்காயத்திற்கு என்று தனி மதிப்பானது உள்ளது.
எந்தவிதமான உணவுகளை எடுத்தாலும் பெரும்பாலும் வெங்காயம் இடம்பெற்றிருக்கும். சமையலுக்கு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை நாம் இல்லங்களில் உபயோகம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
இந்த தருணத்தில்., கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலையானது கடுமையாக உயர்ந்து வந்த நிலையில்., கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னகக ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெங்காயத்தின் தேவையை அறிந்து பிற மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்த நிலையில்., தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் வருத்தமடைந்துள்ளனர்.