இரத்தத்தை அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். உணவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தம் உருவாக முக்கிய காரணம் ஆகும்.

இரத்த உற்பத்தி அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

இரத்தம் அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள் :

நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தமும் அதிகமாகும்.

பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் ஊறும்.

தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் இரத்தம் பெருகும்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.

தக்காளியை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.