நண்பனின் மனைவியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நபருக்கு நேர்ந்த கதி!

தமிழகத்தில் மனைவியை பிரிந்து நண்பனின் மனைவியுடன் வாழ்ந்து வந்த காவலர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்பில் குடியிருந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான தீக்காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரை அவருடன் வசித்து வந்த ஆஷா என்ற பெண் பெட்ரோலை ஊற்றி எரித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த அவர், ஆஷா யார்? அவருக்கும், தனக்கும் எப்ப தொடர்பு ஏற்பட்டது? நடந்தவற்றை எல்லாம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

அதில், என்னுடைய பெயர் வெங்கடேசன், சொந்த ஊர் விழுப்புரத்தில் இருக்கும் பொய்யப்பாக்கம். அப்பா பெயர் காளிமுத்து, அம்மா பெயர் தங்கபாப்பா, அப்பா கூலி வேலை செய்து வருகிறார்.

அம்மா, சென்னை மாநகராட்சியில் துப்பரவுத் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். எனக்கு சகோதரி இருக்கிறாள், அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதால், அவள் இப்போது விழுப்புரத்தில் இருக்கிறாள்.

கல்லூரி படிப்பை முடித்த நான் கடந்த 2016-ஆம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தேன். அப்போது நான் பள்ளியில் படிக்கும் போது காதலித்த ஜெயா என்பவரை திருமணம் செய்து கொண்டேன்.

எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிய முடிவு செய்தோம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் தான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் யூத் பிரிகேடராக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணியாற்ற அங்கு பணியாற்றிய போது என் நண்பன் ஜோதிராமலிங்கத்தின் மனைவி ஆஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது. எங்களின் பழக்கத்தை தெரிந்துகொண்ட ஜோதிராமலிங்கம், ஆஷாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார்.

என் மனைவியும் பிரிந்து சென்றுவிட்டதால், நான், என் மகள், ஆஷா ஆகியோர் ஒரே வீட்டில் தங்கியிருந்தோம், ஆஷாவிக்கு கடந்த சில மாதங்களாகவே எனக்கு வேறு பெண்களுடன் பழக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டாள்.

இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி பிரச்னை வந்தது. கடந்த 23 மற்றும் 24-ஆம் திகதி விடுமுறை எடுத்திருந்தேன். அன்றைய தினம் நான் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு நள்ளிரவில் திரும்பினேன், இதனால் அவள் விடுமுறை நாள் தானே, எங்கு சென்றுவிட்டு இவ்வளவு தாமதமாக வருவது ஏன் என்று சண்டை போட்டாள்.

அதன் பின் சம்பவதினத்தன்று அவள் ஏதோ என் மேல் ஊற்றுவது போல் இருந்தது. நான் விழித்து பார்த்த போது,

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறி நான் இரு சக்கர வாகனத்திற்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை என் மீது ஊற்றி தீ வைத்துவிட்டாள் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அவரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆஷாவை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.