இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி பட நடிகை.. !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘கறுப்பன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை தான்யா ரவிச்சந்திரன். தமிழில் வெளிவந்த ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தின் மூலம் தான்யா அறிமுகமானார். மேலும், தற்போது மாயோன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவரது உண்மையான பெயர் அபிராமி ஆகும். ஆனால், மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் என்ற படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது இவர் தான். அதனால் இவருடைய அபிராமி என்ற உண்மையான பெயரை இவரது சினிமா வாழ்க்கையாக மிஸ்கின் தான்யா என்று மாற்றினாராம்.

இந்நிலையில், தற்போது ஒரே ஒரு படம் தன் கைவசம் இருப்பதால் பட வாய்ப்பிற்காக கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் மேல் அடை மட்டும் அணிந்து கீழாடை எதுவும் அணியாமல் அமர்ந்தபடி முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சியான போஸ் ஒன்று கொடுத்துள்ளார் தான்யா.

மேலும், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தன்யாவை வர்ணித்து புகழ்ந்து வருகிறார்கள் மற்றும் சிலர் இவரை செமையாக கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்…