7 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்..!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டதில் அமைந்துள்ள கக்கினாடா என்னும் கிராமத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 7 வயது சிறுமி சடலமாக மீட்க பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கக்கினாடாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் தீப்தி ஸ்ரீ என்னும் ஏழு வயது சிறுமி படித்து வந்தார். இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியின் தாய் இறந்து விட்டார். எனவே அவரது தந்தை சாந்தி குமாரி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து, சாந்தி குமாரி வழக்கம் போல் தீப்தியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு , பின் மதிய உணவு இடைவேளியின் போது தீப்தியை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக பள்ளியில் தெரிவித்திருக்கிறார். பின்னர் இளைஞர் ஒருவரின் உதவியோடு இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து, மூவரும் இருசக்கர வாகனத்தில் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறும் காட்சிகள் பள்ளியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சியில் தீப்தியின் தலை மற்றும் முகத்தை சாந்தி குமாரி துணியால் மூடி வைத்திருந்தார்.

பள்ளியில் இருந்த அழைத்து சென்றவர், வீட்டிற்கு அழைத்துவராமல் வழியிலே தீப்தியை கொலை செய்து பாலத்துக்கு அடியிலிருந்த உப்புடேரு கால்வாயில் வீசி சென்றிருக்கிறார். அதன்பின் வீட்டிற்கு வந்த சாந்திகுமாரி தீப்தியை காணவில்லை என்று நடமாடினார்.

இதன் காரணமாக, காவல்துறையிடம் அளிக்கப்பட்  புகாரின் பேரில் இரண்டு நாட்களாக தீப்தியின் உடலை காவல்துறையினர் தேடி வந்தார்கள்.  இதை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் உப்புடேரு கால்வாயில் சாக்கு மூட்டை ஒன்றை காவல்துறையினர் மீட்டனர்.

அந்த சாக்குமூட்டையில் தீப்தியின் உடல் சடலமாக கண்டெடுக்க பட்டது. இதை தொடர்ந்து சந்தகுமாரியிடம் நடத்திய விசாரணையில் அவர் தான் சிறுமியை கொன்றதாக ஒப்பு கொண்டுள்ளார்.

இது குறித்து, சாந்தி குமாரியின் மேல் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான நோக்கம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.