கையில் குழந்தையுடன் வந்த தாய்: திடீரென ரயில்முன் பாய்ந்ததால் நேர்ந்த விபரீதம் !

குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், ஓசூரை சேர்ந்த பெண் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் ஓசூர் ரயில்நிலையத்திற்கு பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது பெங்களூருவை நோக்கி மயிலாடுதுறை விரைவு ரயில் வந்துகொண்டிருந்துள்ளது.

திடீரென அந்த பெண் கையில் வைத்திருந்த குழந்தையை ஓரமாக படுக்கவைத்துவிட்டு, ரயில்முன் பாய்ந்து உடல்சிதறி பலியாகியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளன. ரயில்வேகமாக சென்றதில் கற்கள் சில ஓரமாக கிடந்த குழந்தையின் நெற்றியில் தாக்கியுள்ளது.