பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளுக்கு முக்கிய காரணம் இவர்கள்..!

சமீபத்தில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தான்.

கோவை மவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் பலரும் பல கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், தற்போது அதனை மறந்து அடுத்த பிரச்சனைகள் குறித்து பேச ஆரம்பித்து விட்ட நிலையில், தற்போது இயக்குநர் பாக்யராஜ் இதுகுறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது, நேற்று சென்னையில் கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பாக்யாராஜ்பல சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

அதில், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்தலும் சின்னவீடு வைத்து கொண்டலும் பெரிய வீட்டை பாதிப்பதில்லை ஆனால் பெண்கள் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றால் தவறான வழியில் சென்றாலோ அவரின் கணவரையும் குழந்தைகளையும் கொன்று விடுகிறார்கள்.

குறிப்பாக பெண்கள் போனில் பேசும் பொறு போனை தனியாக சென்று சத்தமில்லாமல் பேசுவது ஏன்?ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் போக முடியும்.

பொள்ளாச்சி நடந்த பாலியல் பிரச்சனைக்கு பெண்களே காரணம், பெண்கள் இடம் கொடுத்திருக்காவிட்டால் இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.