தமிழில் வெளிவந்த காதல் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சந்தியா. எந்த ஒரு நடிகைக்கும் முதல் படம் பெரிதாக போவதில்லை. ஆனால், முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்று பிலிம் பேர் மற்றும் தமிழ்நாடு அளவில் இரண்டு விருதுகள் சந்தியாவுக்கு கிடைத்தது.
இதன்பின், தமிழில் தவிர்த்து மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் 10 வருடமாக பிசியான கதாநாயகியாக இருந்தவர் நடிகை சந்தியா. ஆனால், ‘காதல்’ படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு எந்த ஒரு படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை.
மேலும், 2015ஆம் ஆண்டு ‘வெங்கட் சந்திரசேகரன்’ என்பவரை திருமணம் செய்து கொண்டார் சந்தியா. இவர்கள் இருவரும் அழகான பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு சந்தியா ஓர் இரு படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு தனது கணவர் மற்றும் தன் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இனையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கொஞ்சம் குண்டாகவும் பார்ப்பதற்கு பழைய சந்தியாவை போல் இல்லை என்று இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.
View this post on Instagram