நடிகை நயன்தாரா கிறிஸ்தவராக பிறந்தார். இருப்பினும், அவர் இந்து மதத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றார். எந்த ஒரு விஷயத்தையும் நல்லநேரம், ராகுகாலம், ஜாதகப்பொருத்தம் என்று அலசி ஆராய்ந்துவிட்டதான் துவங்குகின்றாராம்.
பிரபுதேவாவை காதலிக்கும் போதுதான் நயன்தாரா இந்து மதத்திற்கு மாறினார். ஆனால், அவர் பிரபுதேவாவுடனான உறவை முறித்துக் கொண்ட பிறகும் இந்துமதத்தை கைவிடவில்லை. தொடர்ந்து இந்து மத கோவில்களுக்கு செல்வது, சமீபத்தில் நடந்த அத்தி வரதர் வைபவம் உள்ளிட்ட அனைத்திலும் நயன்தாரா பங்கேற்றார்.
அவர் நடிக்கும் கதைகள் அனைத்தும் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருப்பதாகத்தான் தேர்வுசெய்து நடிக்கின்றார். கதை நன்றாக இருக்கின்றதா என பார்க்கும் அவர், அதன் பின்னர் தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவருடைய ஜாதகத்தையும் பெற்று ஜோதிடரிடம் காட்டி இந்த கூட்டணியானது வெற்றி பெறுமா என்பதை உறுதி செய்த பின்னரே படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகின்றார்.
அந்த அளவிற்கு இந்து ஆன்மீகத்தின் மீதான நம்பிக்கையானது நயன்தாராவிற்கு ஏற்பட்டு இருக்கின்றது.