ரஜினி, கமல் இருவரும் சினிமாவை தொடர்ந்து தற்போது அரசியலில் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்னும் சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இருவருக்கும் அதிமுக தரப்பில் பல விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் இவர்களை பற்றி கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் அளித்துள்ளார். மூத்த நடிகர்கள் என்னும் முறையில் நடிகர் சங்கத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாதவர்கள் நாட்டை திருத்த வருவதாக கூறுவது எந்த வகையில் நியாயம் என்று கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தில் தேர்தல் பிரச்சனை, கட்டிடம் கட்டுவதில் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகள் பற்றி அவர் குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறார்.
நடிகர் சங்கத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கே வழிகாட்ட முடியாதவர்கள், நாட்டிற்கு வழிகாட்டுவார்களா.? எனவும் கேட்டுள்ளார் அவர்.