பிக்பாஸ் நடிகைகள் புகைப்படம், ஆபாச பக்கத்தில்.?!

மாடலிங்கில் கால்தடம் பதித்த நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அதிக எதிர்ப்புகளை சந்தித்தார். தற்போது திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மீரா மிதுன், தன்னுடைய பேச்சால் பலருக்கும் பதிலடி கொடுத்து இருக்கின்றார்.

சமூக வலைத்தளங்கள் குறித்த திரைப்படமான “கருத்துக்களை பதிவு செய்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மீராமிதுன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர், “தனிப்பட்ட மனிதரை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி பேசுவது குற்றம் என்பது தெரியாமல் பலரும் தங்களுடைய இஷ்டத்திற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற பல பாதகங்களை எடுத்துச் சொல்லும் படமாக இது இருக்கும்.

இதுபோன்ற ஒரு திரைப்படத்தின் விழாவிற்கு சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்ட என்னை அழைத்து பேச வாய்ப்பு அளித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களின் மூலம் நான் தாக்கி பேசப்பட்டு வருகின்றேன்.

என்னுடைய புகைப்படங்களை ஆபாச இணையதளத்தில் பதிவு என்னை மிகவும் அவமானப் படுத்தி வருகின்றனர். இந்த நிலை நமது நாட்டில் மாற வேண்டும்.” என்று ஆவேசமாக அவர் தெரிவித்திருக்கின்றார்.