யோகிபாபுவுடன் காதலா?.. புகைப்படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. வீடியோவை வெளியிட்டு முற்றுபுள்ளி வைத்த பெண்!!

தமிழ் சினிமாவில் தற்போதைய நிலையில் காமெடி நடிகர்கள் பெரிதளவில் இல்லாத குறையை தீர்த்து வருபவர் நடிகர் யோகிபாபு. சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் பின் முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவரது காமெடிகளுக்கும் படத்தில் நல்ல வரபேற்பை பெற்று வருகிறது.

தற்போது கூர்கா, கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் ஹீரோ கெட்டப்பில் நடித்திருப்பார். வரிசையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் யோகிபாபுவிற்கு புகைப்படத்தால் வதந்தியை ஏற்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் படபிடிப்பு ஒன்றில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த நடிகையுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து விரைவில் எனக்கு திருமணம் என்று பரபரப்பான செய்து பரவ ஆரம்பித்தது. சமுகவலைத்தளத்தில் பதிவிடப்பட்ட அந்த புகைப்படத்தில் அவளும் நானும் என்று போடப்பட்டதால் பலரும் அதை பார்த்து யோகி பாபு காதலிக்கிறாரா? என்று அதிர்ச்சியாக கேட்டு வந்தனர்.

அந்த புகைப்படம் வைரலான நிலையில் இதெல்லாம் உண்மை கிடையாது எனக்கு திருமணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன் என்று கூறி தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.


இதை தொடர்ந்து புகைப்படத்தில் இருந்த இளம்பெண் சபீதாவின் டிவிட்டர் பக்கத்தில் இதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு படத்தில் அவருடன் நடித்தபோது அவரிடம் புகைப்படத்தினை எடுத்துகொண்டேன்.

அதன்பின் பல படங்களில் அவருடன் நடித்தேன். இப்படியான தவறான தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.