வலியால் துடித்த நோயாளிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

7.4 கிலோ எடையில் கிட்னியை நோயாளிடம் இருந்து அகற்றி டெல்லி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்

ஆட்டோசோமால் டாமினன்ட் பாலிசிஸ்டிக் என்ற சிறுநீரக நோயால் ஒருவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு சுவாசிப்பதில் பெரும் பிரச்னை நிலவியது. அதோடு உறுப்பு முழுவதும் நீர்க்கட்டிகள் வளரும் அபாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இந்த பாதிப்பு தீவிரமானதையடுத்து, சிறுநீரகத்தை அறுவைசிகிச்சை செய்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அறுவை சிகிச்சையில், நோயாளி உடலில் இருந்து 7.4 கிலோ எடையுள்ள கிட்னியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மனித உடலில் இருந்து 4.25 கிலோ எடைகொண்ட கிட்னி அகற்றப்பட்டதே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறுகையில் ” நமது உடலின் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். அதன் சராசரி எடை அளவு 120 முதல் 150 வரை கிராம் மட்டுமே. ஆனால் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் சிறுநீரகம் 7.4 கிலோ எடை இருந்தது. கிட்டத்தட்ட அந்த கிட்னியானது புதிதாக பிறந்த 2 குழந்தைகள் போல அவ்வளவு பெரியதாக இருந்தது.

நோயாளிக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது கிட்னி வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிதாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை, இந்த அறுவை சிகிச்சை எங்களது மருத்துவ பணியில் மறக்கமுடியாத ஒன்று” என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.