தமிழத்தின் தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தர் உதயகுமார் என்பவர். இவர் இரவி தூங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் துறையில் பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்தார்கள். இதை தொடர்ந்து உதயகுமாரை போக்சா சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இவரின் மீதான வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உதயகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதயகுமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள்.
மேலும், அபராத தொகையை செலுத்தாத பட்சத்தில், சிறை தண்டனை 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டாக நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.