தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி. இவர் கணவனைப் பிரிந்து தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் உறவினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரி காலையில் மர்மமான முறையில் இறந்தார்.
இது குறித்து அவரின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். அப்போது, பண்ணைக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.
இதனால், பயந்து போன அந்த சிறுமி அச்சத்தோடு பதில் அளித்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த சிறுமியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுமி, திண்டுக்கல்லில் படிக்கும் போது திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுவனைக் காதலித்து வந்திருக்கிறார், தற்போது இங்கே வந்துவிட்டதால் சுந்தரி அக்காவின் வீட்டில் தான் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை அறிந்த சுந்தரி அக்கா, இப்படி நடந்து கொண்டால் பெற்றோரிடம் கூறி விடுவேன் என்று மிரட்டியதால் சுந்தரியை நாங்கள் இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என்று ஒத்துக்கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து, அந்த சிறுமியைக் கைது செய்த காவல்துறையினர், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர். சுந்தரியைக் கொன்ற பிறகு தலைமறைவான அந்த சிறுவனை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகிறார்கள்.