அமெரிக்காவில் இந்திய மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்..

அமெரிக்கா நாட்டில் உள்ள சிகாகோவில் இருக்கும் இலியன்ஸ் பல்கலைக்கழத்தில் பயின்று வந்தவர் ரூத் ஜார்ஜ் (வயது 19). இவரது பெற்றோர்கள் இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஐதராபாத் நகரை சொந்த ஊராக கொண்டவர்கள் ஆவார்கள்.

இவர்கள் பல வருடத்திற்கு முன்னதாக அமெரிக்க நாட்டில் குடியேறிய நிலையில்., ரூத் ஜார்ஜ் இலியன்ஸ் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில்., கடந்த வெள்ளிக்கிழமை முதலாக ரூத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறி பல்கலைக்கழக காவல் துரையினரிடம் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர்.

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர்., மாணவியின் அலைபேசி எண்ணை வைத்து சோதனை செய்த நிலையில்., அது அங்குள்ள கார் நிறுத்துமிடத்தில் சமிக்கை காட்டியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையில்., அங்குள்ள காரின் பின் புற இருக்கையில் ஜார்ஜ் இறந்து கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முடிவில்., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு., கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து., அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில்., கடந்த சனிக்கிழமையன்று கார் நிறுத்தத்திற்கு ஜார்ஜ் சென்ற சமயத்தில்., இவரை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் சென்றது தெரியவந்ததை அடுத்து., இவரை சிகாகோவில் இருக்கும் இரயில் நிலையத்தில் கைது செய்தனர். தற்போது கைதான வாலிபரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.