பாராளுமன்ற உறுப்பினராக தான் எந்தவொரு ஊழல், மோசடி செயற்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்கியதில்லை என வன வள இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்ற வேரள அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
´நான் நுளம்புகளை கூட அடிப்பதில்லை. அதேபோல் மாசி துண்டையேனும் உண்பதில்லை. எனது கைகளால் களவு செய்ததில்லை. மோசடி செய்ததில்லை. சிலர் பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் அசுத்தமானவர்கள் என கூறுகின்றனர் அல்லவா?
நுளம்புகளை கூட கொலை செய்யாதவர்கள் நாட்டுக்கு அசுத்தமானவர்கள் என்றால், இந்த நாட்டை கடவுள் காப்பாற்ற வேண்டும். மாசி துண்டை கூட உண்ணாத 8 உறுப்பினர்கள் இந்த பாராளுமன்றத்தில் உள்ளனர்.
சமூகத்தில் பலர் உண்மைகளை விட பொய்களையே அதிகளவில் அறிந்து வைத்துள்ளனர். ஒட்டுமொத்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பொய்களுக்கே அதிகளவில் கைகளை தட்டியுள்ளனர். நான் பல்கலைக்கழகத்தில் இருந்திருந்தால் ஆர்ப்பாட்டகாரர் என அழைக்கப்பட்டிருப்பேன். ஆனால் அங்கிருந்து வெளியில் வரும் பலர் சுயநலவாதிகள். இதில் நீதி இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.