யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்
34 வயதான சுரேந்திரன் குமுதினி எனும் ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குரித்த பெண் ஆறு நாட்களுக்கு முன் பெண் குழந்தையை பிரசவித்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் சமையல் அறையில் இருந்தே குறித்த பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் மீட்க்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டு பெண்ணின் இறப்புத் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.