ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தின் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டார். இவர் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, மேலும், இப்படத்திற்கு டி.இமான் இசை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 90ஸில் தமிழ் திரையுலகத்தை ஆண்ட நடிகை குஷ்பு இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று ஒரு வதந்தி இணையத்தில் உலா வருகின்றது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, மேலும், இதுக்குறித்து எந்த ஒரு தகவலும் படக்குழு தரப்பிலும் கூறவில்லை.