கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் இரு மாணவர்கள்… செய்த தவறு என்ன தெரியுமா? வெளியான உண்மை !!

இந்திய மாநிலமான ஆந்திராவில் காதல் கடிதம் எழுதியதற்காகவும், பொருட்களை திருடியதற்காகவும் பள்ளி சிறுவர்களை கட்டி வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் உள்ள பள்ளி ஒன்றில் 3 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களின் கை, கால்களை கட்டி வைத்திருந்த புகைப்படம் வெளியானதையடுத்து, சிறுவர்களை கொடுமைப்படுத்தியதாக பள்ளி நிர்வாகம் மீது சமூக ஆர்வலர்கள் வழக்கு பதிவு செய்யும்படி கூறியுள்ளனர்.

பின்பு விசாரணையில் பள்ளி தலைமையாசிரியை கூறுகையில், ஒரு மாணவன் காதல் கடிதமும், மற்றொரு மாணவன் சக மாணவர்களின் பொருட்களை திருடியதால் அவர்கள் பெற்றோர்களே இவ்வாறு தண்டனை கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஒரு பள்ளியில் வந்து பெற்றோர்கள் இவ்வாறு தண்டனை கொடுக்கும் அளவிற்கு பள்ளி நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது? என்று மாணவர்களை தண்டித்த பள்ளி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.